Touring Talkies
100% Cinema

Sunday, August 3, 2025

Touring Talkies

எனது தனிப்பட்ட வளர்ச்சிக்கு ஆன்மிகம் தான் பலம்… நடிகை சமந்தா OPEN TALK!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகை சமந்தா, நாக சைதன்யாவிடம் இருந்து 2021-ம் ஆண்டு விவாகரத்து பெற்றார். பின்னர் மயோசிடிஸ் என்ற தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்ட அவர், இப்போது அதிலிருந்து மீண்டு வந்துள்ளார். இந்நிலையில் சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில், ஆன்மிகம் தனக்குப் பலமாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி அவர் கூறும்போது, “வாழ்க்கையில் சில விஷயங்களை மாற்ற விரும்புகிறோம். நம்பிக்கை தான் உங்களை முன்னோக்கி கொண்டு செல்கிறது. கடந்த 3 வருடங்களில் சில விஷயங்கள் நடந்திருக்கக் கூடாது என்று நினைத்தேன். ஆனால், வாழ்க்கை உங்கள் மீது வீசும் அனைத்தையும் சமாளிக்க வேண்டும் என்று உணர்கிறேன்.

மேலும், இப்போது நான் வலுவாக இருக்க ஆன்மிக ஈடுபாடுதான் காரணம். எனது தனிப்பட்ட வளர்ச்சிக்கு ஆன்மிகம் பலமாக இருக்கிறது. என் வாழ்வின் அனைத்து விஷயங்களிலும் அது தாக்கம் செலுத்துகிறது. இன்றைய உலகில், முன்பை விட ஆன்மிகம் அதிகம் தேவைப்படுகிறது.” என்று தெரிவித்துள்ளார்.

- Advertisement -

Read more

Local News