இந்தியாவின் முன்னணி தொழில் அதிபரும் இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரராக உள்ள முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சென்ட் ஆகியோரின் திருமண விழா இன்று அதாவது ஜூலை 12-ம் தேதி பிரம்மாண்டமாக நடத்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டிலிருந்து இவ்விழாவிற்கான திட்டங்கள் தீட்டப்பட்டு நடத்தப்பட்டு வருகின்றது. திருமணக் கொண்டாட்டம் கடந்த ஆறு மாதங்களாக உலகம் முழுவதும் திரும்பிப் பார்க்கும் அளவிற்கு நடைபெற்று வருகிறது.
இன்று நடைபெறும் திருமண விழா தொடர்பான வீடியோக்கள் இணையத்தை ஆக்கிரமித்துள்ளது. மகாராஸ்டிரா மாநிலம் மும்பையிலுள்ள ஜியோ வோர்ல்டு கன்வென்ஷன் சென்டரில் இந்த திருமணம் நடைபெறுகிறது. ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி மற்றும் அவரது மனைவி நீதா அம்பானி தங்களது இளைய மகனின் திருமணத்திற்காக பிரம்மாண்டமான ஏற்பாடுகளைச் செய்துள்ளனர். அதாவது, உலகத்தின் பல்வேறு நாடுகளில் உள்ள பிரபலங்களை அழைத்து நிகழ்ச்சிகள் நடத்தி வருகின்றனர்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது குடும்பத்தினருடன் இந்த திருமணத்தில் கலந்து கொண்டு அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். முதலில் தனது குடும்பத்தினருடன் புகைப்படத்திற்கு போஸ் கொடுத்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். அதன் பின்னர் நிரூபர்கள் தனியாக போஸ் கொடுக்கும்படி கேட்க, சிரித்த முகத்துடன் ஸ்டைலாகவும் மாஸாகவும் நின்று போஸ் கொடுத்து அசத்தினார்.
மேலும், மணமகன் ஆனந்த் அம்பானியுடன் இணைந்து நடனமாடினார். இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ரசிகர்கள் இந்த வீடியோவை இணையத்தில் ட்ரெண்ட் ஆக்கி வருகின்றனர்.