Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

இது உங்களுக்கு மிகவும் தேவையான வெற்றி… அக்ஷய் குமாரை வாழ்த்திய நடிகை ஜோதிகா! #SARFIRA

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழில் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்து மிகப்பெரிய வரவேற்பை பெற்ற சூரரைப் போற்று திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக்கை சுதா கொங்கரா இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் சூர்யா கதாபாத்திரத்தில் நடிகர் அக்சய் குமார் நடித்துள்ளார். சூர்யா இணை தயாரிப்பாளராக இணைந்துள்ளார்.இப்படத்திற்கு ‘சர்ஃபிரா (sarfira)’ எனப் பெயரிடப்பட்டுள்ளனர். இப்படம் இன்று (ஜூலை 12) வெளியாகி நல்ல விமர்சனங்களைப் பெற்றுள்ள நிலையில் ஜோதிகா தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இதில் நடிகை ஜோதிகா, “மிகவும் தேவையான வெற்றி உங்களுக்கு. சிறப்பான வாழ்த்துகள் அக்ஷய்குமார். இதயம் தொடும் நடிப்பு.ஒரு ரசிகையாக உங்களது புகைப்படத்தை எனது அறையில் மாட்டியிருக்கிறேன். அங்கிருந்து தற்போது உங்களது சிறப்பான 150ஆவது படத்தின் தயாரிப்பாளராக உயர்ந்துள்ளேன். எந்நாளும் நினைத்து மகிழக்கூடிய தருணம் இது எனக் கூறியுள்ளார்.

- Advertisement -

Read more

Local News