Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

ராம் சரண் நடிக்கும் படத்தின் மூலம் தெலுங்கில் கால் பதிக்கும் நடிகர் சிவராஜ்குமார் !

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் கேம் சேன்ஜர் படத்தில் நடித்துள்ளார்.இந்த படத்தை தொடர்ந்து ராம் சரண் தனது 16-வது படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்திற்கு தற்காலிகமாக ஆர்.சி 16 என பெயரிடப்பட்டுள்ளது. ஜான்வி கபூர் கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தை இயக்குனர் புச்சி பாபு இயக்குகிறார். ரித்தி சினிமாஸ் மற்றும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார்.இந்நிலையில், இப்படத்தில் பிரபல கன்னட நடிகர் சிவராஜ்குமார் இணைந்துள்ளார். இதனை அவரின் பிறந்தநாளை முன்னிட்டு போஸ்டர் வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது. இதன் மூலம் சிவராஜ்குமார் தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகிறார். இதனால் அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

- Advertisement -

Read more

Local News