Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

வேள்பாரி திரைக்கதை ரெடி… 3 பாகங்களாக எடுக்க திட்டம் இருக்கிறது… இயக்குனர் ஷங்கர்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

வேள்பாரி நாவலை திரைப்படமாக்கும் முயற்சியில் இயக்குநர் ஷங்கர் ஆர்வம் காட்டி வருகிறார். தற்போது அவர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவான ‘இந்தியன் 2’ திரைப்படம் நாளை (ஜூலை 12) வெளியாகிறது. உலகம் முழுவதும் இப்படத்தின் வெளியீட்டிற்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

தொடர்ந்து, நடிகர் ராம் சரணை வைத்து ‘கேம் சேஞ்சர்’ திரைப்படத்தையும் ஷங்கர் இயக்கி வருகிறார். அப்படத்தில் ராம் சரணின் கதாபாத்திரத்துக்குரிய படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இந்தியன் 2 படத்தை தொடர்ந்து இந்தியன் 3 படத்தின் VFX பணிகள் வேகமாக முடிந்தால் ஆறு மாதங்களில் கூட இந்தியன் 3 படத்தை வெளியிட வாய்ப்புள்ளதாக ஷங்கர் சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், நேர்காணல் ஒன்றில் பேசிய ஷங்கர், கொரோனா காலத்தில் எழுத்தாளர் சு.வெங்கடேசன் எழுதிய வேள்பாரி நாவலை வாசித்தேன். எனக்கு மிகவும் பிடித்திருந்தது. உடனே, அதற்கான திரைக்கதையையும் எழுதினேன். இப்படத்தை மூன்று பாகங்களாக எடுக்கத் திட்டமிட்டிருக்கிறேன். இன்னும் நடிகர்கள் குறித்து முடிவு செய்யவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

Read more

Local News