இசையமைப்பாளர் இளையராஜா இந்திய சினிமாவில் இதுவரை 1500க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். தற்போது இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு படமாக உருவாகிறது. இதில் இளையராஜாவாக நடிகர் தனுஷ் நடிக்கின்றார். இப்படத்தை கன்னெக்ட் மீடியா மற்றும் மெர்குரி என இரு நிறுவனங்கள் தயாரிக்கின்றனர். அருண் மாதேஸ்வரன் இயக்கும் இப்படத்திற்கு ‘இளையராஜா’ என தலைப்பு வைத்துள்ளனர்.அக்டோபர் மாதத்தில் இதன் படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டுள்ளனர். இந்த நிலையில் இந்த படத்தில் ஒளிப்பதிவாளர் ஆக நீரவ் ஷா ஒப்பந்தம் ஆகியுள்ளார். மேலும் கலை இயக்குநராக முத்துராஜ் இணைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
Share
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
Read more