Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

எழுத்தாளர் சுஜாதா எனக்கு தந்தை போன்றவர்… நினைவுகூர்ந்த இயக்குனர் ஷங்கர் ! #INDIAN 2

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இந்தியன் திரைப்படம் வெளியாகி 28 ஆண்டுகள் கழித்து நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. இப்படத்தில் சித்தார்த், பாபி சிம்ஹா, விவேக், எஸ்.ஜே.சூர்யா, காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்டோர் பிரதான வேடங்களில் நடித்துள்ளனர்.

இப்படம் ஜூலை 12 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. இதன் புரோமோஷன் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் ஆங்கில ஊடகத்தின் நேர்காணலில் ஒன்றில் எழுத்தாளர் சுஜாதா குறித்து கேட்கப்பட்டபோது ஷங்கர் பேசியதாவது, சுஜாதா எனக்கு தந்தை மாதிரி, அவர் என்னை தனது மகன்போல நடத்துவார். அவரை எப்பொழுதும் மிஸ் செய்கிறேன்.அதேபோல் ஷங்கரின் இந்தியன், முதல்வன், பாய்ஸ் மற்றும் எந்திரன் போன்ற படங்களில் வசனகர்த்தாவாக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தில் பெண்கள் கதாபாத்திரம் வலுவாக இருக்கும். படத்தில் அவர்களின் குரலை உயர்த்துவார்கள். காஜலின் கதாபாத்திரம் இந்தியன் 3 படத்திலும் வரும். ஆரம்பத்தில் இந்தியன் 3 திட்டமிடவில்லை. 2.5 மணி நேரத்தில் இந்தப் படத்துக்கான நியாயத்தை செய்ய முடியாது. அதனால்தான் இந்தியன் 3. படம் பார்த்து மக்கள் ஒரே இரவில் திருந்தமாட்டார்கள். ஆனால் அதன் தாக்கம் இருக்கும் என்றுள்ளார்.

- Advertisement -

Read more

Local News