Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

25 ஆண்டுகளுக்கு முன்பே மகாராஜா பட ஸ்டைலில் ரஜினியை இயக்க விரும்பினேன் – பார்த்திபன் ஓபன் டாக்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முக திறமைகளுடன் கோலிவுட்டில் வலம் வருபவர் இயக்குநர் பார்த்திபன். வித்தியாசமான கதைக்களங்கள், வித்தியாசமான சொற்றொடர்கள், வித்தியாசமான பேட்டிகள், வித்தியாசமான படங்கள் என பார்த்திபன் மாஸ் காட்டி வந்த சூழலில் தற்போது அதிகமாக அவரை படங்களில் நடிகராக பார்க்க முடிகிறது. இயக்கத்திலும் அவ்வப்போது இணைந்து வித்தியாசமான கதைக்களங்களில் படங்களை கொடுத்து வருகிறார் பார்த்திபன்.

கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்னதாக ரஜினி தன்னுடன் இணைந்து பணியாற்ற விரும்பியதாகவும் இதையொட்டி அவருக்கு ஒரு கதையை தான் கூறியதாகவும் தன்னுடைய ஸ்டைலில் ரஜினியை இயக்க திட்டமிட்டதாகவும் பார்த்திபன் தனது பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். இடைவேளை வரை ரஜினிகாந்த் பழிவாங்க உள்ள நபர் குறித்து வெளிப்படுத்தாமல் தான் கதையை கூறியதாகவும் பழிவாங்கும் நோக்கம் மட்டுமே ரஜினியின் கண்களில் தெரியும் என்பதாக தான் ஒரு கதைக்களத்தை ரஜினிக்காக உருவாக்கியதாகவும் பார்த்திபன் தெரிவித்துள்ளார்.

படையப்பா ஸ்டைலில் தான் ரஜினியை இயக்க விரும்பவில்லை என்றும் அவரை வித்தியாசமாக காட்ட நினைத்ததாகவும் பார்த்திபன் குறிப்பிட்டுள்ளார். தற்போது விஜய் சேதுபதி நடிப்பில் நிதிலன் சாமிநாதன் இயக்கத்தில் வெளியாகியுள்ள ‘மகாராஜா’ பட ஸ்டைலில் தான் 25 ஆண்டுகளுக்கு முன்னதாகவே ரஜினிகாந்த்திற்காக கதையை உருவாக்கி இருந்ததாகவும் பார்த்திபன் குறிப்பிட்டுள்ளார். ஆனால் இந்த படம் தவிர்க்க முடியாத காரணங்களால் எடுக்க முடியாமல் போனதாகவும் அவர் கூறியுள்ளார்.

- Advertisement -

Read more

Local News