Saturday, September 14, 2024

7/G திரைப்படம் எப்படி இருக்கு? – திரை விமர்சனம்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

மீண்டும் சினிமாவில் கம்பேக் கொடுத்துள்ள சோனியா அகர்வால், 7/ஜி படத்தின் மூலம் பேய் கதையை கையில் எடுத்து அதில் கதையின் நாயகியாக நடித்து இருக்கிறார். இப்படத்தின் விமர்சனத்தை காண்போம். ரோஷன் ஸ்மிருதி வெங்கட் தம்பதியினர் 10 வயது மகனுடன் புதிய வீட்டில் குடியேறுகிறார்கள். அந்த வீட்டில் இரண்டு ஆவிகள் உள்ளன என்பதை ஸ்மிருதி கண்டறிகிறார். ஆவிகள் மற்றும் வீட்டுக்கு என்ன தொடர்பு இருக்கிறது? அவைகளை வெளியேற்ற ஸ்மிருதி என்ன ஒப்பந்தம் செய்தார்? இதனால் அவளுக்கும் ஆவிகளுக்கும் வெற்றி கிடைத்ததா என்பது கதையாகும்.

வழக்கமான பழிவாங்கும் பேய் கதையை பாட்டி கதை சொல்லும் பாணியில் சொல்வதற்கு முயன்றுள்ளார், எழுதி இயக்கியுள்ள ஹாரூன். புதிய வீட்டுப் புகுவிழா கொண்டாட்டம், ரோஷனை அடைய விரும்பும் அவரது தோழி சினேகா குப்தா செய்யும் கரும் மந்திரம், புதிய வீட்டில் ஸ்மிருதி எதிர்கொள்ளும் திடீர் பயங்கள் முதலானவை முதல் 30 நிமிடப் படத்தை விறுவிறுப்பாக நகர்த்துகின்றன. ஆனால், ரோஷன் பெங்களூரு சென்றுவிட, நாயகனுக்கான வேலையை ஸ்மிருதி, சோனியா அகர்வால், சினேகா குப்தா ஆகிய பெண்கள் கையில் எடுத்துக்கொள்கிறார்கள். ஆனால், காட்சிகளின் முடிச்சுகள் எளிதில் யூகிக்கக் கூடியவையாக உள்ளன.

ஹாரர் நகைச்சுவை மற்றும் குடும்ப சென்டிமென்ட் ஆகிய கலவையைத் தேர்ந்தெடுத்து, காட்சிகளை அதற்குப் பொருந்துமாறு அமைத்திருந்தாலும், ஆவியின் ‘பிளாஷ்பேக்’ மற்றும் வில்லனின் சதி ஆகியவை மிக நீளமாகத் தோன்றுகின்றன என்பது குறைபாடு.சோனியா அகர்வால் மற்றும் ஸ்மிருதி கூட்டணி நன்றாகவே இருக்கிறது. இரு கதாபாத்திரங்களின் இணைவையும் சீராக இயக்கியுள்ளார் இயக்குநர். அதை உணர்ந்து அவர்கள் நன்றாகவே நடித்திருக்கிறார்கள்.

சித்தார்த் விபின் தோற்றமும் அவர் இதுவரை நடித்து வந்துள்ள ஸ்டைலுக்கும் இந்த நகைச்சுவை வில்லன் வேடம் பொருந்தவில்லை. அதை ஈடு செய்யும் விதமாக, பாடல்களும் நம்பகமான பின்னணி இசையும் வழங்கியிருக்கிறார். இந்த 7ஜி ஆவிகளை பயமின்றி பார்க்கலாம்.

- Advertisement -

Read more

Local News