Saturday, September 14, 2024

தனுஷ் தன்னை தானே செதுக்கிக்கொண்டார் – செல்வராகவன் ! #Raayan Audio Launch

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் தனுஷ், எஸ்ஜே சூர்யா, செல்வராகவன், அபர்ணா முரளி, துஷாரா விஜயன், சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள படம் ‘ராயன்’. தனுஷின் இயக்கத்திலும் நடிப்பிலும் உருவாகியுள்ள இந்த படம் வரும் 26ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

கடந்த மாதத்தில் இப்படம் வெளியாவதாக கூறப்பட்ட நிலையில் தவிர்க்க முடியாத காரணங்களால் படத்தின் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டது. இதையடுத்து, இந்த மாதம் 26ம் தேதி படம் சர்வதேச அளவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படத்தின் இசையமைப்பை ஏஆர் ரஹ்மான் மேற்கொண்டுள்ளார், இதில் மூன்று பாடல்கள் லிரிக் வீடியோக்களாக வெளியாகி சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளன. இந்நிலையில், இன்றைய தினம் படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சி சென்னையில் மிகப்பெரிய அளவில் நடைபெற்றுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகரும் இயக்குனருமான செல்வராகவன், நடிகர் தனுஷை தான் செதுக்கவில்லை என்றும், தான் கல்லை மட்டும் வைத்துவிட்டு சென்றதாகவும், அவர் தன்னைத்தானே செதுக்கிக்கொண்டார் என்றும் கூறியது அனைத்து ரசிகர்களையும் கவர்ந்தது. மேலும், தனுஷ் இயக்குநராக இன்னும் பல படங்களை கொடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். அவரின் நல்ல மனதுக்கு அவருக்கு எல்லாமே நல்லதாகவே நடக்கும் என்றும் அவர் பேச, ரசிகர்களின் ஆரவாரம் இடியாக ஒலித்தது.

- Advertisement -

Read more

Local News