Saturday, September 14, 2024

டீன்ஸ் படம் வெளியீடு தள்ளி போகிறதா? தொடரும் சிக்கல்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பிரபல நடிகரும் இயக்குநருமான ராதாகிருஷ்ணன் பார்த்திபன், டீன்ஸ் என்ற புதிய திரைப்படத்தை உருவாக்கி வருகிறார். கோவையை சேர்ந்த ரியல் வொர்க்ஸ் நிறுவனத்தின் சிவபிரசாத், டீன்ஸ் திரைப்படத்தின் கிராபிக்ஸ் காட்சிகளுக்கான மேற்பார்வையாளராக உள்ளார். இந்நிறுவனம் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த மாநகரம், லியோ, விக்ரம் போன்ற திரைப்படங்களுக்கு பணியாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த பிப்ரவரி 20-ம் தேதிக்குள் படத்திற்கான கிராபிக்ஸ் காட்சிகளுக்கான அனைத்து பணிகளையும் முடிக்க வேண்டும் என்று கூறப்பட்டது. சிவபிரசாத் 68 இலட்சத்து 54 ஆயிரத்து 400 ரூபாய் கேட்ட நிலையில், பார்த்திபன் 42 இலட்சம் ரூபாய் செலுத்தியுள்ளார். படத்தில் கிராபிக்ஸ் காட்சிகள் பிப்ரவரி மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என்று ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்தது. ஆனால் குறிப்பிட்ட நேரத்தில் பணிகள் முடிக்கப்படவில்லை.

இதற்கிடையில் சிவபிரசாத் கடந்த மாதம் 4-ம் தேதி 88 இலட்சத்து 38 ஆயிரத்து 120 ரூபாய் செலுத்த வேண்டும் என பார்த்திபனுக்கு மின்னஞ்சல் அனுப்பினார். சிவபிரசாத் ஒப்பந்தத்தை மீறி கூடுதலாக பணம் கேட்டதும், குறிப்பிட்ட நேரத்தில் பணிகளை முடிக்காததும் தெரியவந்துள்ளது. இதனால் பார்த்திபன் கோவை பந்தய சாலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் நம்பிக்கை மோசடி, ஏமாற்றுதல் ஆகிய பிரிவுகளில் சிவபிரசாத் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடந்து வருகிறது.

ஆனால் சிவபிரசாத் தரப்பில் கூறப்படுவது: “பார்த்திபன் சார் பல திருத்தங்களைச் செய்வார். நாங்கள் கொடுத்த பணத்திற்கு மேல் வேலை செய்துள்ளோம். சொன்ன காட்சிகளை விட அதிகமாக வேலை இருந்ததால் சொன்ன தொகையை விட அதிகமாக கேட்டோம். பணத்தை பற்றி கேட்டபோது, பணிகளை முடித்தவுடன் மொத்தமாக வாங்கிக் கொள்ளுமாறு கூறினார். நாங்கள் நம்பிக்கையின் அடிப்படையில் சில காட்சிகளை தவிர்த்து 400-க்கும் மேற்பட்ட கிராபிக் காட்சிகளை செய்து கொடுத்துள்ளோம். அவர்கள் அந்த காட்சிகளை வைத்துதான் வரும் ஜூலை 12-ம் தேதி வெளியிடவுள்ளனர்,” எனவும் இதனால் படம் வெளியிடக்கூடாது என்று வழக்கை சிவபிரசாத் தொடர்ந்துள்ளார்.

ஆனால் படக்குழு இன்னும் 6 நாட்களில் படம் வெளியாகும் என ப்ரோமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். படத்தின் அடுத்த பாடலான இக்கி பிக்கி பாடலையும் படக்குழு வெளியிட்டுள்ளது. இதனால் திரைப்படம் சொன்ன தேதியில் வெளியாகுமா என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது.

- Advertisement -

Read more

Local News