Touring Talkies
100% Cinema

Wednesday, March 12, 2025

Touring Talkies

உருவாகிறது பரத்தின் காளிதாஸ் 2… ஜூலை 7ல் பட துவக்க விழா!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பெரிய இயக்குனர்கள், நடிகர்கள் தங்களது படங்களின் இரண்டாம் பாகங்களை தொடங்குவது ஒரு வழக்கம். ஆனால், ஏற்கனவே வெற்றி பெற்ற படம் ஒன்றை இயக்கிய பின்னர் சரிவை சந்தித்தவர்கள், மீண்டும் தங்களை நிலைநிறுத்துவதற்காக அப்படங்களின் இரண்டாம் பாகங்களை எடுக்கும் போக்கு அதிகரித்துள்ளது. அந்த வகையில், நடிகர் பரத் நடித்த காளிதாஸ் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளது. நாளை முதல் இதன் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குனர் ஷங்கரின் பாய்ஸ் படம் மூலம் அறிமுகமான நடிகர் பரத், தனது திரையுலக பயணத்தில் காதல், எம் மகன் உள்ளிட்ட பல வெற்றி படங்களை கொடுத்தார். அதன் பிறகு, தனது இடத்தை தக்கவைத்துக் கொள்ள போராடிய பரத்திற்கு, காளிதாஸ் திரைப்படம் ஒரு டீசன்டான வெற்றியை வழங்கியது. படம் வெளியான சமயத்தில் விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய பாராட்டுகளை பெற்றது. இந்த படத்தை இயக்குனர் ஸ்ரீ செந்தில் இயக்கியிருந்தார்.

ஒரு கொலையைத் துப்பறியும் போலீஸ் அதிகாரியான பரத், தன் நிஜ வாழ்க்கையிலும் எதிர்கொள்ளும் குடும்ப சிக்கல்களை மையமாகக் கொண்டு இந்த படம் உருவாகி இருந்தது. இந்த படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைத்திருந்த நிலையில், இரண்டாம் பாகத்திற்கு சாம் சி எஸ் இசையமைக்கிறார். முதல் படத்தில் பணியாற்றிய ஒளிப்பதிவாளர் மற்றும் படத்தொகுப்பாளர் இருவரும் இந்த படத்திலும் பணியாற்றுகிறார்கள்.

- Advertisement -

Read more

Local News