இந்தியன் 2 படத்தை தொடர்ந்து ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிப்பில் உருவாகி வரும் ‘கேம் சேஞ்சர்’ படத்தில் கதாநாயகியாக கியாரா அத்வானி நடித்து வருகின்றார். கியாரா அத்வானி பாலிவுட் திரையுலகில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக உள்ளார்.


இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் பயோபிக்கில் தோனியின் மனைவி சாக்ஷி கதாபாத்திரத்தில் நடித்தார். பின்னர் லஸ்ட் ஸ்டோரீஸ் வெப் சீரிஸில் நடித்தும் பாராட்டுகளைப் பெற்றார். கியாரா அத்வானி படங்களில் மிகுந்த கிளாமராக வருவது இவருக்கு சுலபமாக இருப்பதாக கூறப்படுகிறது.


கியாரா அத்வானி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது போட்டோ ஷூட் புகைப்படங்களைப் பகிர்ந்து வருவது வழக்கமாக உள்ளது. சமீபத்தில் அவர் பதிவிட்டுள்ள போட்டோ அவரது ரசிகர்களிடையே செம ட்ரெண்டிங்கில் உள்ளது. கவர்ச்சிகரமான மேலாடையில் பட்டு ஷூட் நடத்தியுள்ளார். இந்த போட்டோ ஷூட்டில் எடுக்கப்பட்ட ஆறு போட்டோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும், இதே உடையில் நிகழ்ச்சி ஒன்றிலும் கலந்துகொண்டுள்ளார். தற்போது இப்புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.