Touring Talkies
100% Cinema

Wednesday, March 12, 2025

Touring Talkies

இளையராஜா இசையில் உருவாகும் தெருக்கூத்து கலைஞர்களின் வாழ்வியல் திரைப்படம்! #JAMA

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தெருக்கூத்து கலைஞர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து சில படங்கள் ஏற்கனவே வெளிவந்துள்ளன. அதே வகையில், ஜமா என்ற படம் அதன் கதை சொல்லும் முறையில் ஒரு வித்தியாசமான கோணத்தில் உருவாகி வருகிறது. பாரி இளவழகன் இந்த படத்தை இயக்கியுள்ளதுடன் கதாநாயகனாகவும் நடித்துள்ளார். அம்மு அபிராமி கதாநாயகியாக நடித்துள்ளார். சிறிய பட்ஜெட்டில் உருவான இப்படத்திற்கு, கதை கேட்டதும் இசையமைக்க இளையராஜா சம்மதித்துள்ளார்.

அதுமட்டுமின்றி, சினிமா பாடல்களுக்கான கருவிகளை பயன்படுத்தாமல், நிஜமான தெருக்கூத்து கலைஞர்களை அழைத்து, அவர்கள் தங்களது இயல்பான முறையில் பாடல்களை பாடவும், இசைக்கருவிகளை இசைக்கவும் செய்து, அதை ஒலிப்பதிவு செய்து படத்தில் பயன்படுத்தியுள்ளார் இளையராஜா. இந்தப்படத்திற்கு சினிமாத்தனமான இசையல்லாமல், இயல்பான உணர்வுகளை கொண்ட இசையையும் பாடல்களையும் கொடுக்க விரும்பினார்.

தமிழ்நாட்டில் உள்ள தெருக்கூத்து கலைஞர்களின் வாழ்க்கை முறை மற்றும் சவால்களை மையமாகக் கொண்டு இந்த படம் உருவாகியுள்ளது. குறிப்பாக, நாடகத்தின் போது ஆண் கலைஞர்கள் பெண் வேடமிடும்போது அவர்கள் அனுபவிக்கும் உணர்ச்சிகள், மனதின் மாற்றங்கள் மற்றும் சமூகத்தில் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களை இந்தப் படம் விவரிக்கிறது.

- Advertisement -

Read more

Local News