இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள படம் இந்தியன் 2. இதில், கமல் ஹாசன், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர், காஜல் அகர்வால் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்தியில் இப்படம் இந்துஸ்தானி 2 என்ற பெயரில் வெளியாகிறது. முதல் பாகத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்த நிலையில், இரண்டாம் பாகத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.1996 ஆம் ஆண்டு வெளியான முதல் பாகம், ஊழல் பற்றிய கதையுடன் வந்தது.
தற்போது இந்த இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டுள்ளது. இப்படம் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டது.ஜூலை 12 ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாகும் நிலையில், புரொமோஷன் பணிகளில் படக்குழு ஈடுபட்டு வருகிறது.
சமீபத்தில் நடந்த நேர்காணல் ஒன்றில், பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கானுடன் இணைந்து பணியாற்ற விருப்பம் இருப்பதாக ஷங்கர் தெரிவித்தார். இது பற்றி பேசிய ஷங்கர், “ரோபோ (எந்திரன்) படத்திற்குப் பிறகு சில படங்களுக்காக ஷாருக் கானை ஓரிரு முறை சந்தித்தேன். ஆனால் அது எதுவும் கைகூடவில்லை. ஆனால், ஷாருக் கானுக்கு பொருத்தமான ஸ்கிரிப்ட் வந்தால், அவரை வைத்து படம் எடுக்க நான் எப்போதும் தயாராக உள்ளேன் என்றார்.