Saturday, September 14, 2024

தனது செகண்ட் இன்னிங்ஸ்க்காக காத்திருக்கும் கார்த்தி… பார்ட் 2 படங்கள் இவ்ளோவா?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இயக்குனர் மணி ரத்னத்திடம் உதவி இயக்குனராக பணியாற்றி, 2007 ஆம் ஆண்டு அமீர் இயக்கத்தில் பருத்திவீரன் திரைப்படத்தில் நடித்துக் கார்த்தி தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார். முதல் படமே கார்த்திக்கு மாபெரும் வெற்றியை கொண்டுவந்தது.

அதனைத் தொடர்ந்து பையா, நான் மகான் அல்ல, சிறுத்தை, மெட்ராஸ், தோழா போன்ற பல வெற்றி படங்களில் நடித்தார். 2017 ஆம் ஆண்டு எச். வினோத் இயக்கத்தில் தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் நடித்தார். இப்படம் மிகத் திரில்லாக எடுக்கப்பட்டது.பின் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 2019 ஆம் ஆண்டு கைதி படத்தில் நடித்தார். இப்படம் கார்த்தியின் திரைப்பயணத்தில் மிக முக்கியமான படமாக அமைந்தது. ஜப்பான் திரைப்படத்திற்கு பிறகு, தற்போது நலன் குமாரசாமி இயக்கத்தில் வா வாத்தியார் படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்திற்கு பிறகு, கார்த்தி சர்தார் 2, வா வாத்தியார் போன்ற படங்களில் நடித்துக் முடித்து, லோகேஷ் இயக்கத்தில் கைதி 2 படத்தில் நடிக்கவுள்ளார். அதற்கடுத்து, எச். வினோத் இயக்கத்தில் தீரன் பாகம் 2ல் நடிக்கவுள்ளார்.இவ்வாறு கார்த்தி பல சுவாரஸ்யமான படங்களில் நடித்து வருகிறார். அடுத்து வெளிவரும் கார்த்தி திரைப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.

- Advertisement -

Read more

Local News