Tuesday, November 19, 2024

‘பன் பட்டர் ஜாம்’ என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகும் பிக்பாஸ் ராஜு!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கியதிலிருந்து அதில் பங்கேற்கும் போட்டியாளர்களுக்கு புகழ் கிடைக்கிறது. குறிப்பாக சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாக விரும்பும் சில இளைஞர்கள் இதைப் பயன்படுத்தி முன்னேற முயல்கின்றனர். அப்படிப் பார்த்தால், பிக்பாஸ் மூலம் பிரபலமான நடிகர் கவின் இப்போது இளம் முன்னணி நடிகராக உயர்ந்துள்ளார்.

இதுபோல் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமான தர்ஷன், முகேன், பாலாஜி முருகதாஸ், ஆரவ் போன்றவர்களும் சினிமாவில் கதாநாயகர்களாக அறிமுகமானார்கள். ஆனால் கிடைத்த வாய்ப்பை அவர்கள் பெரிய அளவில் பயன்படுத்த முடியவில்லை. இதில் ஆரவ் மட்டுமே கலகத்தலைவன் படத்தின் மூலம் வில்லனாக நடித்து பாராட்டைப் பெற்று, தற்போது அஜித்துக்கு வில்லனாக நடிக்கும் அளவிற்கு உயர்ந்துள்ளார்.

இந்நிலையில் பிக் பாஸ் சீசன் 5 வின்னரான ராஜூ ஜெயமோகன் தற்போது பன் பட்டர் ஜாம் என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகிறார். இந்த படத்தை இயக்குனர் ராகவ் மிர்தத் இயக்குகிறார். இன்றைய இளைஞர்களின் வாழ்க்கையை எப்படி எடுத்துக் கொள்கிறார்கள் என்பதைக் கூறும் படமாக இது உருவாகிறது.

குறிப்பாக நாகேஷ் மற்றும் சிவகார்த்திகேயன் நடித்த எதிர்நீச்சல் படங்களின் பாணியில் இந்த படம் இருக்கும் என்று படத்தின் இயக்குனர் ராகவ் கூறுகிறார். ஏற்கனவே சில வருடங்களுக்கு முன் ‘நட்புன்னா என்னன்னு தெரியுமா’ படத்தில் கவினுடன் இணைந்து முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ராஜூ ஜெயமோகன். தற்போது கிடைத்துள்ள இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்வாரா என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.

- Advertisement -

Read more

Local News