Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

ஜெயிலர் படத்தை போல் பிளெடி பெக்கர் படத்துக்கு பக்காவாக ப்ளான் போட்ட நெல்சன்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ஸ்டார் படம்‌ ஒருபக்கம் வரவேற்பைப் பெற்றாலும் மறுபக்கம் கலவையான விமர்சனங்களையே பெற்றது எனலாம். எனவே, கவின் தனது அடுத்த படத்தில் எப்படியாவது பெரும் வெற்றியை கொடுக்க வேண்டும் என்ற முனைப்பில் இருக்கிறார். அந்த வகையில், தனது நெருக்கமான நெல்சன் திலீப்குமார் தயாரிப்பில் பிளெடி பெக்கர் படத்தில் நடிக்கிறார் கவின். அந்தப் படத்தை சிவபாலன் முத்துக்குமார் இயக்குகிறார். படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ரிலீஸ் தேதி: படத்தின் ப்ரோமோ வீடியோ சில மாதங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது மற்றும் வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், பிளெடி பெக்கர் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி, அந்தப் படம் ஆகஸ்ட் இரண்டாம் தேதி ரிலீஸாகவிருப்பதாக கூறப்படுகிறது. பீஸ்ட் படத்தை இயக்கி பயங்கரமான விமர்சனங்களை சந்தித்த நெல்சன் திலீப்குமார், ஜெயிலர் படத்தின் மூலம் கம்பேக் கொடுத்தார்.

அந்தப் படம் கடந்த வருடம் ஆகஸ்ட் 10ஆம் தேதி ரிலீஸானது. இதன் காரணமாக தான் தயாரிக்கும் முதல் படத்தையும் ஆகஸ்ட் மாதம் வெளியிட்டால் ஜெயிலர் படம் போல மெகா ஹிட் அடிக்குமென்ற செண்ட்டிமெண்ட் காரணமாக இந்த முடிவை நெல்சன் எடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

- Advertisement -

Read more

Local News