விஜய்யின் ‘கில்லி’ படம் சமீபத்தில் மீண்டும் திரைக்கு வந்து புதிதாக ரிலீசான பல படங்களின் வசூலை முறியடித்தது. வசூல் சாதனை நிகழ்த்தியதால் அவர் நடித்துள்ள ‘பூவே உனக்காக, துள்ளாத மனமும் துள்ளும், காதலுக்கு மரியாதை’ போன்ற வெற்றி படங்கள் மீண்டும் ரிலீசாகுமா என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இந்த நிலையில் ‘பூவே உனக்காக’ படத்தை மீண்டும் திரைக்கு கொண்டுவர ஏற்பாடுகள் நடக்கின்றன என தகவல்கள் வெளியாகியுள்ளது. படத்தை டிஜிட்டலுக்கு மாற்றும் பணிகள் நடக்கின்றன. இரண்டு மாதங்களில் படத்தை ரீ ரிலீஸ் செய்ய திட்டமிட்டு உள்ளனர்.



‘பூவே உனக்காக’ படம் 1996-ல் வெளியானது. இதில் விஜய்யுடன் சங்கீதா, அஞ்சு அரவிந்த், சார்லி, நாகேஷ், நம்பியார், ஜெய்கணேஷ், மதன்பாப் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். விக்ரமன் இயக்கியிருந்தார். படத்தில் இடம்பெற்ற ஆனந்தம் ஆனந்தம், சொல்லாமலே போன்ற பாடல்கள் பட்டி தொட்டியெங்கும் பட்டையை கிளப்பின என்பது குறிப்பிடத்தக்கது.