Tuesday, November 19, 2024

கதா நாயகியாக என்ட்ரி கொடுக்கும் ரக்ஷிதா மஹாலக்ஷ்மி… ‘யூ ஆர் நெக்ஸ்ட்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

சின்னத்திரையின் நட்சத்திர நடிகை ரக்ஷிதா மஹாலட்சுமி. பிரிவோம் சந்திப்போம், இளரவசி, சரவணன் மீனாட்சி, நாச்சியாபுரம் உள்ளிட்ட பல புகழ்பெற்ற தொடர்களில் நடித்தார். ‘உப்பு கருவாடு’ என்ற படத்தின் மூலம் சினிமாவிற்கு வந்தார். இந்த படத்தில் அவர் இரண்டாவது நாயகியாக நடித்திருந்தார். அதன்பிறகு மெய்நிகரி, எக்ஸ்ட்ரீம் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். தற்போது முழுமையான கதை நாயகியாக ‘யூ ஆர் நெக்ஸ்ட்’ என்ற படத்தில் நடிக்கிறார்.

இந்த படத்தின் பணிகள் நேற்று பூஜையுடன் தொடங்கியது. இந்த படத்தை ஐமேக் பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் ஸ்கை பிரேம் என்டர்டெயின்மென்ட் ஆகிய நிறுவனங்கள் சார்பில் மொஹிதீன் அப்துல் காதர் மற்றும் மணி ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள். ஷரீப் இயக்குகிறார். ரக்ஷிதா சோலோ ஹீரோயினாக நடிக்க, அவருடன் கே.எஸ்.ரவிக்குமார், உதயா, ஜனனி, தினேஷ், திவ்யா கிருஷ்ணன், அர்ஷத், கேபிஒய் வினோத், ரபி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். கே.ஜி ரத்தீஷ் ஒளிப்பதிவாளராகவும், ‘பேட்டை’ வசந்த் இசையமைப்பாளராகவும் பணியாற்றுகின்றனர்.

படம் குறித்து இயக்குனர் ஷரீப் கூறும்போது “தகவல் தொழில்நுட்பத் துறையில் பணிபுரியும் இளைஞர்களைச் சுற்றி நடைபெறும் பல்வேறு சம்பவங்களை உள்ளடக்கிய ஹாரர் பின்னணி கொண்ட திரைப்படமாக உருவாகிறது. இது பான் இந்தியா திரைப்படமாக தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகிறது. இந்திய சினிமா ரசிகர்களுக்கு இத்திரைப்படத்தின் மூலம் புதுவிதமான அனுபவத்தை வழங்க இருக்கிறோம்” என்றார்.

ரக்ஷிதா மஹாலட்சுமி கூறும்போது, “இந்த படம் எனக்கு ஒரு புதிராகவே உள்ளது. கடைசி நிமிடத்தில் படத்தின் கதையை கூறினார்கள். கதை பிடித்திருந்ததாலும் படத்தில் நடிக்கும் சிறந்த நட்சத்திரங்களாலும் நடிக்க ஒப்புக் கொண்டேன். படத்தின் கதை ஹாரர் கதையம்சத்தை கொண்டது. அனைவரது எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்யும் திரைப்படமாக இருக்கும் என்றார்.

- Advertisement -

Read more

Local News