Tuesday, November 19, 2024

தோழிகளுடன் வைஃப் செய்யும் ராஷ்மிகா மந்தனா… டிரேடிஷனல் லுக்-ல் ட்ரெண்ட் ஃபோட்டோ!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழில் கார்த்தி நடித்த சுல்தான் படத்தின் மூலம் அறிமுகமான ராஷ்மிகா மந்தனா, கடந்தாண்டு விஜய் நடித்த வாரிசு படத்திலும் நடித்திருந்தார். அடுத்ததாக தனுஷ் நடித்த வருமான் குபேரா படத்திலும் இவர் தான் ஹீரோயின். கன்னட துறையில் அறிமுகமாகி தெலுங்கு, தமிழ் என தென்னிந்திய மொழிகளில் நடித்து வந்த ராஷ்மிகா மந்தனா தற்போது பாலிவுட்டில் பிசியான நடிகையாக மாறியுள்ளார். அமிதாப் பச்சனுடன் இணைந்து குட் பை படத்தில் நடித்த ராஷ்மிகா, கடந்தாண்டு இறுதியில் வெளியான அனிமல் திரைப்படத்தில் நடித்த மிகப்பெரிய வெற்றியை ருசித்தார். அடுத்ததாக ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சல்மான்கான் நடித்து வரும் சிக்கந்தர் படத்திலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில், பல மாதங்களுக்குப் பிறகு கர்நாடகாவில் உள்ள குடகு மலைப்பகுதியில் தனது தோழியின் திருமணத்துக்காக ராஷ்மிகா மந்தனா சென்றுள்ளார். திருமணத்தில் அவர் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். “கடவுளே எப்படி என் வீட்டை மறந்தேன்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

வித்தியாசமான சேலை கட்டுடன் திருமண விழாவில் பங்கேற்ற ராஷ்மிகாவின் போட்டோக்கள் தற்போது இணையத்தில் தீயாக பரவி வருகின்றன. பாதியில் சேலை கட்டிக் கொண்டிருக்கும் போதே அப்படியே ஃபங்கஷனுக்கு வந்துட்டீங்களா என்றும் நெட்டிசன்கள் பங்கமாக கலாய்த்து வருகின்றனர். குடகு மலையில் இப்படித்தான் பாரம்பரியமாக சேலை கட்டுவார்களோ என்னவோ என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

- Advertisement -

Read more

Local News