Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

எனக்கு டிவிட்டர்ல கணக்கே இல்ல… ஜான்வி கபூர் சொன்ன அதிர்ச்சி தகவல்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பிரபல நடிகை ஜான்வி கபூர், பாலிவுட்டில் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில், இவர் நடித்த மிஸ்டர் அண்ட் மிஸஸ் மஹி படம் வெளியிடப்பட்டு பல ரசிகர்களை கவர்ந்துள்ளது. இதில் ஜான்வியின் கதாபாத்திரம் சிறப்பான வரவேற்பை பெற்றது. படம் வசூலிலும் சாதனையும் படைத்துள்ளது.

பாலிவுட்டில் மட்டுமில்லாமல் தெலுங்கிலும், ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம்சரணுடன் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார் ஜான்வி. ஜூனியர் என்டிஆருடன் தேவரா படத்தில் நடித்து முடித்துள்ளார்.எஸ்டிஆர்48 படத்தில் கியாரா அத்வானி மற்றும் ஜான்வி கபூர் ஆகிய இரண்டு பாலிவுட் நடிகைகள் இணைவதாகவும், படம் பான் இந்தியா படமாக வெளிவருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

இன்ஸ்டாகிராமில் அதிகம் செயல்படுகின்ற ஜான்வி கபூர், 24 மில்லியனுக்கும் மேற்பட்ட ரசிகர்களால் பாலோ செய்யப்படுகிறார். இவரின் பதிவுகள் ரசிகர்களை கவர்ந்து ஏராளமான லைக்ஸ்களையும் பெற்று வருகின்றன. இந்நிலையில், தன்னுடைய கணக்கு இன்ஸ்டாகிராமில் மட்டுமே உள்ளதாகவும், ட்விட்டரில் கணக்கு எதுவும் இல்லை என்றும் ஜான்வியின் டீம் விளக்கமளித்துள்ளது.ஜான்வி கபூர் பெயரில் ஏராளமான போலி ஐடிகள் உருவாக்கப்பட்டு தவறான செய்திகள் பரப்பப்படுவதாகவும், அவற்றில் உண்மை தன்மை இல்லை என்றும் ஜான்வியின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கையில், ரசிகர்கள் இந்த போலி கணக்குகளை நம்ப வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

- Advertisement -

Read more

Local News