Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

நயன்தாரா மற்றும் த்ரிஷாவை ஓவர் டேக் செய்த ராஷ்மிகா… எந்த விஷயத்தில் தெரியுமா?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, திருமணத்துக்குப் பிறகும் ஒரு சில படங்களில் நடித்து வருகிறார். இவர்‌ தற்போது கன்னட நடிகர் யாஷ்-ன் டாக்ஸிக் திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதேபோல சீனியர் நடிகை திரிஷா கமல்ஹாசனின் ‘தக்லைப்’, அஜித்தின் ‘விடாமுயற்சி’ படங்களில் நடிக்கிறார். மலையாளம், தெலுங்கிலும் பிசியாக இருக்கிறார்.இளம் நடிகைகளே ஆச்சரியப்படும் அளவுக்கு நயன்தாரா, திரிஷா இருவரும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்கள். 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஹீரோயின்களாக கலக்கி வரும் இருவருமே ஒரு படத்துக்கு ரூ.10 கோடி முதல் ரூ.12 கோடி சம்பளமாக பெறுகின்றனர்.

ஆனால், தற்போது கன்னட நடிகை ராஷ்மிகா அடுத்தடுத்து பல படங்களில் கமிட்டாகி வரும் நிலையில், இவர்களை முந்தி, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான்கான் நடிப்பில் உருவாகும் ‘சிக்கந்தர்’ படத்தில் நடிக்க ரூ.15 கோடி சம்பளமாக கேட்டுள்ளார். பேச்சுவார்த்தையில் ரூ.13 கோடி வரை சம்பளம் வழங்க தயாரிப்பு நிறுவனம் முன்வந்துள்ளது. இதனால் நயன்தாரா, திரிஷாவை சம்பள விஷயத்தில் ராஷ்மிகா ஓவர் டேக் செய்ததாக கூறப்படுகிறது.

- Advertisement -

Read more

Local News