விஜய் சேதுபதி நடித்த ஐம்பதாவது திரைப்படமான ’மகாராஜா’ இன்று வெளியான நிலையில், ‘கோட்’ படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி மகாராஜா படம் வெற்றியடைய வாழ்த்துகளை தெரிவித்தார். அதுமட்டுமின்றி விஜய் ரசிகர் கோட் படத்தின் அப்டேட் குறித்த கேள்விக்கு சூப்பரான பதிலையும் அளித்துள்ளார்.

விஜய் நடித்து வரும் ‘கோட்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகின்றன. படத்தின் ரிலீஸ் தேதி செப்டம்பர் 5 என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அர்ச்சனா கல்பாத்தி மகாராஜா திரைப்படம் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்றது மகிழ்ச்சியாக இருப்பதாகவும், வெற்றி அடைய வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

அதனை அடுத்து, ரசிகர் கோட் படத்தினை குறித்து கேட்ட கேள்விக்கு ‘விஜய்க்கு இம்மாதம் ஸ்பெஷல் என்பதால், சூப்பர் ஸ்பெஷல் அப்டேட்டுகள் விரைவில் வெளியாகும்’ என்றும் கூறினார்.விஜய்யின் பிறந்த நாள் மாதம் என்பதால், இரண்டு அல்லது மூன்று அப்டேட்டுகள் எதிர்பார்க்கப்படுகின்றன. இதனால், விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.