சாய் அபியங்கர் பிரபல தமிழ் பின்னணி பாடகர்களான திப்பு ஹரிணியின் மகன். கடந்த ஜனவரி மாதம் ’கட்சி சேர’ என்ற பாடலை இசையமைத்து பாடினார். இப்பாடல் வெளியான சில நாட்களிலே இணையத்தில் வைரலானது. 21 வயதான இவர், இளம் இசையமைப்பாளராக மிக முக்கியமானவராக திகழ்கின்றார்.
இன்ஸ்டாகிராம் மக்கள் ரீல்ஸ்-சை இப்பாடலுக்கு நடனம் ஆடி ட்ரெண்ட் செய்தனர்.கட்சி சேர வீடியோ பாடலில் சாய் அபியங்கருடன் சம்யுக்தா மேனன் நடனம் ஆடியுள்ளார். சம்யுக்தா ஆடிய குறிப்பிட்ட ஸ்டெப் மிகப் பெரிய வைரல் எலெமண்ட் ஆனது. யூடியூபில் இப்பாடல் 12 கோடியே 90 லட்சம் பார்வைகளை கடந்துள்ளது.
இந்த வைரல் பாடலை தொடர்ந்து, சாய் அபியங்கர் தனது அடுத்த பாடலான ‘ஆச கூட’ பாடலை வெளியிட்டுள்ளார். இப்பாடலின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. இந்த வீடியோ பாடலில் ப்ரீத்தி முகுந்தன் நடித்துள்ளார். சாய் அபியங்கர் தமிழ் சினிமாவில் ஒரு இசையமைப்பாளராக வெற்றி பெறுவார் என ரசிகர்கள் வாழ்த்தி வருகின்றனர்.