தமிழில் ‘ஓகே கண்மணி’, ’24’, ‘அச்சம் என்பது மடமையடா’, ‘காற்று வெளியிடை’, ‘சர்க்கார்’, ’99 சாங்ஸ்’ உள்ளிட்ட படங்களில் இடம்பெற்ற பல சூப்பர் ஹிட் பாடல்களை ஜோனிதா காந்தி பாடியுள்ளார். இசைப் புயலைத் தொடர்ந்து அனிருத் இசையிலும் அவர் பாடி வருகிறார். ஒரே நேரத்தில் ஒன்பது மொழிகளில் பாடக்கூடிய திறமை கொண்டவர் ஜோனிதா காந்தி.


‘டாக்டர்’ படத்தில் இடம்பெற்ற ‘செல்லம்மா செல்லம்மா’ பாடலை அனிருத் உடன் இணைந்து ஜோனிதா பாடிய நிலையில், ‘பீஸ்ட்’ படத்தின் ‘அரபி குத்து’ பாடலிலும் இவர்கள் இருவரும் இணைந்து பாடி நடனமாடினார்கள். லிரிக் வீடியோவை இவர்களுக்கான ஆல்பம் வீடியோவாக மாறிய நிலையில், இருவரும் காதலித்து வருகிறார்களா என்ற கேள்விகள் எழுந்தன.

இதைத்தொடர்ந்து ஹாட்டான போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வரும் ஜோனிதா காந்தி, தற்போது நீச்சல் உடையில் நீச்சல் குளத்தில் தனது தோழியுடன் கையில் மதுபானத்துடன் புகைப்படத்தை வெளியிட்டு, “இதுதான் எதிர்பார்ப்பு. ஆனால், உண்மையில் அங்கேயும் வெயில் அடிக்கிறது” என தலையில் துண்டு போட்டுக் கொண்டு நீந்திய வீடியோவை வெளியிட்டுள்ளார்.

