Touring Talkies
100% Cinema

Wednesday, March 12, 2025

Touring Talkies

ஒரு முட்டாள் மனிதனை நம்புவது பயப்படுவதற்கு சமம்… ரசிகர் கேள்விக்கு பளிச் பதில்‌‌‌ கொடுத்த ராஷ்மிகா…

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தெலுங்கில் கொடிகட்டி பறக்கும் ராஷ்மிகா தமிழிலும் நடிக்க ஆரம்பித்தார். கார்த்தி நடித்த சுல்தான் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். சுல்தான் போதிய வரவேற்பைப் பெறவில்லை. பின்னர் விஜய்யுடன் வாரிசு படத்தில் நடித்தார். அதுவும் போதிய வரவேற்ப்பு இல்லை.தற்போது தனுஷூடன் குபேரா படத்தில் நடித்து வருகிறார்.இப்படம் தமிழ் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று தனக்கு வெற்றியாக அமையும் என்ற நம்பிக்கையில் உள்ளார்.

சமீபத்தில் அனிமல் படம் குறித்த கேள்விக்கு ராஷ்மிகா பதில் அளித்தது டிரெண்டாகி உள்ளது. சமூக வலைத்தளங்களில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்க எப்போதும் தயங்கியதில்லை. இப்போது அனிமல் படத்தின் வீடியோ ஒன்றை வெளியிட்ட ரசிகர் ஒருவருக்கு பதில் அளித்துள்ளார்.ரசிகர் ஒருவர், அனிமல் படத்தில் ரன்பீர் கபூர் மற்றும் ராஷ்மிகா இருவரும் பேசும் வீடியோவையும், ரன்பீர் கபூர் ட்ரிப்டி டிம்ரி நடித்த ஜோயா கதாபாத்திரத்தின் மீது பழக்கம் ஏற்படும் வீடியோவையும் சேர்த்து வெளியீட்டு ‘ஒரு மனிதனை நம்புவதை விட பயங்கரமானது எதுவுமில்லை’ என பதிவிட்டார்.

அதற்கு ராஷ்மிகா பதில் அளித்து, “ஒரு முட்டாள் மனிதனை நம்புவது பயப்படுவதற்கு சமம். அங்கேயும் நிறைய நல்ல மனிதர்கள் இருக்கிறார்கள். அவர்களை நம்புவது எப்போதும் ஸ்பெஷல்” என கூறினார். ராஷ்மிகாவின் இந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

Read more

Local News