Saturday, September 14, 2024

என்ன இவரு போய் இப்படி பேசிட்டாரே… எம்‌.எஸ்.பாஸ்கர் பேச்சுக்கு எழுந்த விமர்சனங்கள்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் விதார்த் பல சிறு பட்ஜெட் படங்களில் நடித்து வருகிறார். படங்கள் ஓடுகிறதோ இல்லையோ? என்று பார்க்காமல் தொடர்ந்து கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி நடித்து வருகிறார். அவர் நடித்துள்ள லாந்தர் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இந்த ஆண்டு டெவில், அஞ்சாமை உள்ளிட்ட படங்களில் விதார்த் நடித்துள்ளார்.

இந்நிலையில் லாந்தர் பட இசை வெளியீட்டு விழாவில் நடிகர் எம்.எஸ் பாஸ்கர் பேசியது விவாதத்தை கிளப்பியுள்ளது. சினிமாவுக்கு வந்து ஒரு படத்தை பார்த்தால், பிடித்திருந்தால் பாராட்டுங்கள், இல்லையென்றால் அமைதியாக இருங்கள். உங்கள் நண்பர்கள், உறவினர்களுக்கு படம் பார்க்க வேண்டாம் என சொல்லாதீர்கள் என கூறினார்.

மக்கள் படம் பார்க்க 120 ரூபாய் அல்லது 200 ரூபாய் செலவழிக்கின்றனர். அதை வைத்து யாரும் மாடமாளிகையோ, கோபுரமோ கட்டப் போவதில்லை என எம்.எஸ். பாஸ்கர் தெரிவித்தார். சினிமாவில் பலர் கஷ்டப்பட்டு உழைக்கின்றனர். நீங்க கொடுக்கிற டிக்கெட் பல குடும்பங்களை வாழ வைக்கும். படம் பிடிக்காவிட்டால், தியேட்டரில் இருந்து யாரும் வர வேண்டாம் என போட்டு படத்தை காலி பண்ணிடுறாங்க என்றார். நல்ல படத்தை எடுக்க வேண்டும் என கலைஞர்களுக்கு அறிவுரை வழங்காமல், படம் நல்லா இல்லை என விமர்சிக்கக் கூடாது என்று கூறியது சரியல்ல என நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.

- Advertisement -

Read more

Local News