பிரபலமான நடிகை மலைகா அரோரா, மணிரத்னம் இயக்கிய உயிரே படத்தில் வரும் சூப்பர் ஹிட் பாடலான “தைய தைய” பாடலுக்கு அற்புதமாக ஆடி மக்களின் மனதில் இடம் பிடித்தார். ஷாருக்கான், மனிஷா கொய்ராலா ஆகியோர் நடித்திருந்த அப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். மலைகா அரோரா பாலிவுட் நடிகர் மற்றும் தயாரிப்பாளரான அர்பாஸ் கானை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தார். அவர்களுக்கு அர்ஹான் கான் என்ற மகன் உள்ளார்.

அர்பாஸ் கானை பிரிந்த பிறகு, மலைகா பாலிவுட் நடிகர் அர்ஜுன் கபூரை காதலிக்கத் தொடங்கினார். 2019ம் ஆண்டு, மலைகா அரோரா, அர்ஜுன் கபூரை காதலிக்கின்றது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இருவரும் இன்ஸ்டாகிராமில் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களையும், பார்ட்டிகளில் கலந்து கொள்ளும் வீடியோக்களையும் வெளியிட்டனர். அவர்களுக்கு இடையே சுமார் 12 வயது வித்தியாசம் என்பது குறிப்பிடத்தக்கது.

அர்ஜுன் கபூர் மற்றும் மலைகா அரோரா லிவிங் டூ கேதரில் வாழ்ந்து வந்தனர்.போனி கபூர் மகனின் காதலுக்கு கடும் எதிர்ப்பை தெரிவித்தாலும், அதைப் பொருட்படுத்தாமல், இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர். ஆனால் சமீபத்தில், பாலிவுட் வட்டாரங்களில் அர்ஜுன் கபூர் மலைகாவை பிரேக்கப் செய்துவிட்டதாக செய்திகள் வந்தன. இதை மறுத்துள்ளார் மலைகா, அதுமட்டுமின்றி பிகினியில் செம ஜாலியாக இருக்கும் புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்தார். இந்த புகைப்படம் வைரல் ஆகி, நெட்டிசன்கள் “இவங்களுக்கு 50 வயசுனு சொன்னா யாரும் நம்ப மாட்டாங்க” என கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
