பிரேமம் படம் மூலம் பிரபலமான மலையாள இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன், சமீப காலமாக பரபரப்பான கருத்துக்களை சோசியல் மீடியாவில் கூறுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.இவர் விஜயகாந்த், ஜெயலலிதா ஆகியோரின் மரணம் குறித்து கூறிய கருத்துக்கள் பரபரப்பை ஏற்படுத்தின. அதேசமயம் தான் மன அழுத்தத்திற்கு ஆளாகி இருப்பதாகவும் அவரே சுய விளக்கம் அளித்து இருந்தார்.

இந்த நிலையில், பிப்ரவரி மாதம் மலையாளத்தில் வெளியாகி வெற்றி பெற்ற மஞ்சும்மேல் பாய்ஸ் படத்தை தாமதமாக பார்த்ததாக வருத்தம் தெரிவித்துள்ளார். படத்தின் இயக்குனர் சிதம்பரத்திற்கும், நடித்தவர்களுக்கும் பாராட்டுகளை தெரிவித்தார்.

மேலும், இந்த படத்திற்கு நிச்சயம் ஆஸ்கர் விருது கொடுக்கப்பட வேண்டும் என கூறியுள்ளார். அப்படி கொடுக்கப்படவில்லை என்றால், ஆஸ்கர் விருதின் மீது நம்பிக்கை இல்லை என்றும், அந்த அளவுக்கு படம் சிறப்பாக அமைந்துள்ளது என்றும் கூறியுள்ளார்.
