சிம்பு ‘பத்து தல’ படத்திற்குப் பிறகு தற்போது தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் ‘எஸ்டிஆர் 48’ படத்திலும், மணிரத்னம் இயக்கத்தில் ‘தக் லைஃப்’ படத்திலும் கமிட்டாகியுள்ளார். ‘தக் லைஃப்’ படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே, சிம்பு ஷூட்டிங்கிற்கு லேட்டாக வருகிறார் என்ற குற்றச்சாட்டு முன்னதாக பரவலாக பேசப்பட்ட ஒன்று.சிம்புவை வைத்து ‘இது நம்ம ஆளு’ படத்தை இயக்கிய பாண்டிராஜ் சமீபத்தில் அளித்த பேட்டியில், “நான் சோம்பேறிகளுடன் சேர மாட்டேன். எனக்கும் நான் இயக்கிய ஹீரோக்களுக்கும் இடையே நல்ல நட்பு உள்ளது.
எனக்கும் சிம்புவுக்கும் பிரச்சனை என்று பலர் சொல்வார்கள். ஆனால் எனக்கு அவரால் பிரச்சனை இல்லை, அவரது பெற்றோர்களால் பிரச்சனை வந்தது.’இது நம்ம ஆளு’ படத்தின்போது சிம்பு லேட்டாக வந்தார், ஆனால் 8 மணி நேர வேலையை ஐந்து மணி நேரத்தில் அவரை வைத்து முடித்துவிடலாம். சிம்பு திறமையானவர். அவர் மீது நான் கோபப்படவில்லை, அவரும் என்னைப் பற்றி விடிவி கணேஷிடம் பெருமையாக தான் பேசியுள்ளார். இப்போதும் நாங்கள் நல்ல நட்புடன் இருக்கிறோம் என பேசியுள்ளார்.