Tuesday, November 19, 2024

என்னைப் போன்ற ஒருவரை வைத்து ஷூட்டிங் முடித்தது மிகப்பெரிய விஷயம் – விஜய் சேதுபதி ஓபன் டாக்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

குரங்கு பொம்மை படத்தை இயக்கி புகழ்பெற்றவர் நித்திலன் சுவாமிநாதன். அவர் தற்போது விஜய் சேதுபதி, பாய்ஸ் மணிகண்டன் ஆகியோரை வைத்து மகாராஜா படத்தை இயக்கியுள்ளார். விஜய் சேதுபதியின் 50ஆவது படமாக உருவாகியிருக்கும் மகாராஜா ஜூன் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

விஜய் சேதுபதி நீண்ட நாள்களுக்கு பிறகு ஹீரோவாக நடித்திருப்பதால் அவரது ரசிகர்கள் இப்படம் மெகா ஹிட்டாகும் என்று எதிர்பார்க்கின்றனர்.படம் வெளியாவதற்கு சில நாட்கள் இருக்கையில், பத்திரிகையாளர்களிடம் பேசிய விஜய் சேதுபதி, “எனது குருநாதர் சீனு ராமசாமிக்கு நன்றி. அவருடைய வாழ்க்கையில் பல சிரமங்கள் இருந்தபோதும், என்னை நம்பி படத்தின் ஷூட்டிங்கை முடித்தது ஆச்சரியமானது. அதற்கு அவருக்கு பெரிய நன்றி.

எனக்கு நடிக்கத் தெரியாதபோது சி.ஜே.பாஸ்கர் எனக்கு சீரியல் வாய்ப்பு கொடுத்தார்.அவரிடம் ஒருநாள் அவர் என்னிடம், ‘உன் கண்ணும், சிரிப்பும் நடிக்கும்போது நல்லா இருக்கு. நீ நல்லா வருவ’ என்றார். அவருக்கும், எனக்கு உதவிய எல்லாருக்கும் நன்றி. இந்த 50 படங்களும் ஒவ்வொருவரின் பங்களிப்பால் உருவானது. எனக்கு கிடைத்த விமர்சனங்கள், பாராட்டுகள் அனைத்தும் என்னை சிந்திக்க வைத்தன.

நான் துபாயில் வேலை செய்தபோது 5 ஸ்டார் படத்துக்கும் பாய்ஸ் படத்துக்கும் ஆர்ட்டிஸ்ட் தேடிக்கொண்டிருந்தார்கள். அப்போது நான் எனது ஃபோட்டோவை அனுப்பினேன். மணிகண்டனை நான் ஏற்கனவே பார்த்திருந்தேன். சமீபத்தில் அவரது பேட்டியை பார்த்தபோது, ‘இனிமேல் எதற்கு பயப்பட மாட்டேன்’ என ஒருவரின் உணர்வு எனக்கு தோன்றியது. பெரிய பூதம், பேய் என்றால் அது வாழ்க்கை என்றுள்ளார்.

- Advertisement -

Read more

Local News