Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

வதந்திகளை நம்பாதீர்கள்… காஞ்சனா-4 படம் குறித்து அப்டேட் சொன்ன ராகவா லாரன்ஸ்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ராகவா லாரன்ஸ் இயக்கத்திலும் நடிப்பிலும் ‘காஞ்சனா 4’ படத்தின் வேலைகள் தொடங்கியுள்ளதென்று கடந்த சில நாட்களாக செய்திகள் வெளியாகின. மேலும், மிருணாள் தாக்கூர் இப்படத்தின் நாயகியாக நடிக்கிறார் என்று கூறப்பட்டது.

இந்த நிலையில், ராகவா லாரன்ஸ் தனது எக்ஸ் பக்கத்தில், “காஞ்சனா’ படத்தினை குறித்து சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவல்கள் அனைத்தும் வதந்திகள் மட்டுமே. ராகவேந்திரா புரொடக்ஷன் சார்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்,” என்று தெரிவித்துள்ளார்.

முந்தைய ‘காஞ்சனா’ படங்களெல்லாம் குடும்பத்தினர் கொண்டாடும் படங்களாகவே இருந்தன. எனவே, இந்த படங்கள் வசூலில் லாபம் அடைந்தன. சமீபத்தில் ‘அரண்மனை 4’ படமும் வெற்றி பெற்றதால், ‘காஞ்சனா 4’ படத்தை உருவாக்குகிறார்கள் என்று கோலிவுட்டில் கூறப்படுகிறது.

- Advertisement -

Read more

Local News