Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

மீண்டும் வருகிறான் கபிலன்… சார்பட்டா பரம்பரையின் இரண்டாம் பாகத்துக்கு தயாராகும் பா.ரஞ்சித்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பா. ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடித்த ‘சார்பட்டா பரம்பரை’ திரைப்படம் 2021 ஆம் ஆண்டு ஓடிடியில் வெளியானது. இந்த படத்தில் பசுபதி, துஷாரா விஜயன், கலையரசன், ஜான் விஜய் போன்றோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்தார்.இப்படத்தில் நடித்த ஒவ்வொரு கதாபாத்திரங்களும் கொண்டாடப்பட்ட என கூறலாம் அந்தளவுக்கு நல்லதொரு கதையாக அமைந்திருந்தது.

தியேட்டர்களில் இப்படம் ரிலீஸாகவிட்டாலும் மிகப்பெரிய வரவேற்பையும் வெற்றியையும் வரவேற்பையும் இப்படம் பெற்றது. இந்த படத்தின் இரண்டாவது பாகம் உருவாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பாகத்தை நீலம் ப்ரோடக்ஷன் மற்றும் ஆர்யாவும் தயாரிக்க இருப்பதாக கூறப்பட்டது.

ஆனால், படத்தின் பட்ஜெட் அதிகமாக இருந்ததால் படப்பணிகள் தாமதமாகி வந்தன.இந்நிலையில், இந்த படத்தை தயாரிக்க மற்றொரு தயாரிப்பு நிறுவனமும் முன் வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இந்த படப்பணிகள் விரைவில் தொடங்க உள்ளன என தகவல்கள் வெளியாகியுள்ளது.

- Advertisement -

Read more

Local News