Tuesday, September 24, 2024

உலகநாயகன் கமல்ஹாசனை சந்தித்து தனது மகள் திருமணத்திற்கான அழைப்பிதழை வழங்கிய சரத்குமார்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகை வரலட்சுமி சரத்குமார் தமிழ் சினிமாவில் போடா போடி, சர்கார், சண்டக்கோழி 2, தாரை தப்பட்டை போன்ற படங்களில் கதாநாயகியாகவும், வில்லியாகவும் நடித்து அவரது திறமையை திரையுலகில் வெளிப்படுத்தியவர். தற்போது அவர் குணசத்திர வேடங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் அவர் ஹனுமான் படத்தில் நடித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து, அவர் தனுஷின் ராயன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. வரலட்சுமி சரத்குமாருக்கும் மும்பை தொழிலதிபர் நிக்கோலாய் சச்தேவுக்கும் சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

இவர்களின் திருமணம் விரைவில் நடைபெற உள்ளது. இதற்காக நடிகர் சரத்குமார், ராதிகா சரத்குமார், வரலட்சுமி சரத்குமார் திருமண அழைப்பிதழை திரைப்பிரபலங்களுக்கு வழங்கி வருகின்றனர்.

சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சந்தித்து அழைப்பிதழ் வழங்கிய நிலையில் தற்போது உலகநாயகன் கமல்ஹாசனையும் நேரில் சந்தித்து அழைப்பிதழ் வழங்கியுள்ளனர். இப்புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளன.

- Advertisement -

Read more

Local News