1980ல் ‘மூடுபனி’ என்ற திரைப்படத்தின் மூலம் நடிகர் மோகன் அறிமுகமானார். பிறகு, அவர் தமிழ் சினிமாவில் ஒரு தற்போது வரை முக்கிய நடிகராக பாராட்டப்படுகிறார். அவர் நடித்த அதிகமான படங்கள் வெற்றிப்படங்கள் தான். கடந்த 15 ஆண்டுகளில் அவர் எந்த படத்திலும் நடிக்காமல் இருந்தார், ஆனால் தற்போது ‘ஹரா’ என்ற படத்தில் நாயகனாக நடிக்கிறார்.
இந்த படம் வருகிற ஏழாம் தேதி திரைக்கு வருகிறது. அதைத் தொடர்ந்து இந்த படத்தின் புரமோஷன் பணிகளில் ஈடுபட்டுள்ளார் மோகன் அவர் ஒரு பேட்டியில், மறைந்த நடிகை சில்க் ஸ்மிதா குறித்து பேசினார்.அதில், “சில்க் ஸ்மிதா நடித்த பெரும்பாலான படங்களில் கிளாமர் கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும் நிஜமாக அவர் சிறந்தவர் அவர் நல்ல நடிகை.
நான் அவரிடத்தில் நெருங்கி பழகி இருக்கிறேன். அவரின் திறமையான நடிப்பை கண்டு அவரிடத்தில் கால்ஷீட் கேட்க விரும்புவர்கள். ஆனாலும் சில்க் ஸ்மிதா யாரிடத்திலும் அலட்டிக் கொள்ள மாட்டார். அவர் ரொம்ப சாதாரணமாக எளிமையாக இருப்பவர்” என்று மோகன் தெரிவித்துள்ளார்.