பயமறியா பிரம்மை என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார் ராகுல் கபாலி. இப்படத்தில் புதுமுக நடிகர் ஜேடி ஹீரோவாக இப்படத்தில் நடித்துள்ளார்.இந்த ‘பயமறியா பிரம்மை’ படத்தில், குரு சோமசுந்தரம், ஜான் விஜய், ஹரிஷ் உத்தமன், வினோத் சாகர், விஸ்வந்த், சாய் பிரியங்கா ரூத், திவ்யா கணேஷ், ஹரீஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு கே இசையமைத்திருக்கிறார். அகில் பிரகாஷ் படத்தொகுப்பு செய்கிறார்.

தற்போது இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இயக்குனரும், தயாரிப்பாளருமான பா.ரஞ்சித் இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரை தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு, படக்குழுவுக்கு அவருடைய வாழ்த்தை தெரிவித்துள்ளார். இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முழுவதுமாக நிறைவடைந்து தற்போது படப்பிடிப்புக்கு பிந்தைய பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. ஃபர்ஸ்ட் லுக்கில் படத்தில் இடம்பெறும் கதாபாத்திரங்களின் தோற்றம் வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டிருப்பதால் பார்வையாளர்களிடையே பெரும் வரவேற்பினை பெற்றிருக்கிறது.
மேலும் ‘பயமறியா பிரம்மை’ எனும் இந்த திரைப்படம் இந்தியா, சிங்கப்பூர் உள்ளிட்ட பல நாடுகளில் நடைபெற்ற ஆறுக்கும் மேற்பட்ட சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு பல விருதுகனை வென்றிருக்கிறது என்பதும், இந்த ஆண்டு கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் இந்த திரைப்படம் திரையிடப்பட்டு, பலரின் பாராட்டுகளை பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது என்றார்.