Tuesday, September 17, 2024

இந்தியன் 2 படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்காதது ஏன்? ட்ரெண்டாகும் வீடியோ…

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

அனிருத் இந்தியன் 2 படத்தில் ஒப்பந்தமான சமயத்திலேயே ஏ.ஆர். ரஹ்மானிடம் நீங்கள் ஏன் இந்தியன் 2 படத்துக்கு இசையமைக்கவில்லை என்கிற கேள்வியை ஏ.ஆர். ரஹ்மானிடம் வைத்தனர். அதற்கு பதிலளித்த அவர், கமல் சார் இந்தியன் 2 படத்துக்கு நான் தான் பண்ணணும் என அடிக்கடி என்னை வற்புறுத்திக் கொண்டே இருந்தார்.

ஆனால், ஷங்கர் சார் என்னை அதுதொடர்பாக அணுகவில்லை. அந்நியன் மற்றும் நண்பன் படங்களுக்கும் அவர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் பணியாற்றியுள்ளார். அவருக்கு ஒரே இசையமைப்பாளருடன் பணியாற்றினால் போர் அடித்திருக்கலாம். அவருக்கு ஒரு சேஞ்ச் வேண்டும் என்று கதை ரீதியாக தோன்றிய காரணத்தால் என்னை இந்த படத்துக்கு அழைக்கவில்லை என நினைக்கிறேன் என ஏ.ஆர். ரஹ்மான் அளித்த பதிலை தற்போது ரசிகர்கள் ஷேர் செய்து வருகின்றனர்.

கமல்ஹாசன் இந்தியன் படத்துக்கு வந்தது போலவே ஏ.ஆர். ரஹ்மானை வைத்து பாடல்களை உருவாக்க நினைத்த நிலையில், ஷங்கரின் முடிவு தான் இந்தியன் 2 படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மானுக்கு பதிலாக அனிருத்தை கொண்டு வரவேண்டும் என்பது தெளிவாக தெரிகிறது.

- Advertisement -

Read more

Local News