Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

STR48 படத்தின் இசையமைப்பாளர் இவர்தானா? மாஸ்ஸா இருக்குமே…

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

கமல்ஹாசனுடன் தக் லைஃப் படத்தில் மணிரத்னம் இயக்கத்தில் நடித்து வருகிறார் நடிகர் சிம்பு. இந்த படத்தில் கமல்ஹாசனுக்கு அடுத்தபடியாக மிகவும் வெயிட்டான கேரக்டரில் அவர் நடித்து வருவதாகவும் கமல்ஹாசனின் வளர்ப்பு மகனாக நடித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனிடையே இந்தப் படத்தை தொடர்ந்து தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் கமல்ஹாசன் தயாரிப்பில் உருவாக உள்ளதாக அறிவிக்கப்பட்ட எஸ்டிஆர் 48 படத்தில் சிம்பு இணைய உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக ஜான்வி கபூர் மற்றும் கியாரா அத்வானி என இரு நாயகிகள் கமிட்டாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் படத்தின் இசையமைப்பாளர் குறித்த அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் இசையமைப்பாளர் குறித்தும் தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. படத்தில் இசையமைக்க யுவன் சங்கர் ராஜாவிடம் பேச்சு வார்த்தைகள் நடந்து வருவதாக படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது. இது குறித்தும் விரைவில் அறிவிப்பை எதிர்பார்க்கலாம். கடந்த 2 ஆண்டுகளாக சிம்புவின் படங்கள் வெளியாகாத சூழலில் அடுத்தடுத்த படங்களில் அவர் நடிக்கவுள்ளது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

- Advertisement -

Read more

Local News