ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தியன் 2 திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது. இந்த நிகழ்வில் ஷங்கர், கமல், அனிருத், காஜல் அகர்வால் ஆகியோர் உட்பட படக்குழுவினர் மற்றும் இயக்குநர்கள் வசந்த பாலன், நெல்சன், லோகேஷ் கனகராஜ் ஆகியோரும் பங்கேற்றனர். அவர்கள் இயக்குநர் ஷங்கரின் படைப்புகள் மற்றும் கமலின் நடிப்பைப் பற்றி பேசினர்.
இந்நிலையில் இவ்விழாவில் பேசிய லோகேஷ் கனகராஜ், “‘விக்ரம்’ ஷூட்டிங்கின் மூன்றாவது நாள் டயலாக் பேப்பர் பார்த்துட்டு நான் எழுதுற தமிழ்ல பிழை இருக்குனு சொன்னாரு. அவர் யார் எழுதுறதுனு கேட்டாரு.
அப்போ நான்தான் எழுத்துனேன்னு சொன்னேன். அதுக்குப் பிறகு நான் நல்லா தமிழ் எழுத தெரிஞ்ச ஆளை வச்சு எழுத ஆரம்பிச்சிட்டேன். நான் அனிருத்தை மீட் பண்ணும்போதெல்லாம் ‘இந்தியன் 2’ படத்தோட அப்டேட்தான் கேட்பேன்.
‘விக்ரம்’ படத்திற்கு ஒப்பந்தம் கையெழுத்து போடுறதுக்கு ‘இந்தியன் 2’ படத்தோட படப்பிடிப்பு தளத்துக்குப் போனேன். அப்போ அவர் கையில மேக்கப் போட்டுருந்ததுனால அவரால கையெழுத்து போடா முடியல. அப்போ கையில இருக்கிற மேக்கப்பை நீக்கிறதுக்கே 5 நிமிஷம்கிட்ட ஆகுச்சு. அந்த மேக்கப்போட அவர் ஒவ்வொரு நாளும் இருந்திருக்காரு.” என்று லோகேஷ் கனகராஜ் அவருடனான அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.