இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் நடிகர் சூர்யாவின் 44வது படத்தை இயக்க தயாராகியுள்ளார். இந்த திரைப்படத்தை சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்கிறது. சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

இந்த படத்தில் சூர்யா இரட்டை வேடங்களில் நடிக்க உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.முதற்கட்ட படப்பிடிப்பு அந்தமானில் நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.இதுகுறித்த வீடியோவை கார்த்திக் சுப்பராஜ் வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில், சூர்யாவின் 44வது படத்தில் பூஜா ஹெக்டே நடிக்க இருப்பதாக இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் அப்டேட் ஒன்றை வெளியிட்ட நிலையில் அதனைத் தொடர்ந்துஇந்த படத்தில் ஜோஜூ ஜார்ஜ், கருணாகரன், ஜெயராம் ஆகியோரும் நடிக்க உள்ளனர் எனவும் அவர் அதிகாரபூர்வ போஸ்டர்கள் மூலம் தெரிவித்துள்ளார்.