Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

மீண்டும் கிட்டாரை கையில் எடுத்து கலக்கிய மோகன்… விழா கோலம் கண்ட சூப்பர் சிங்கர் மேடை!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில், போட்டியாளர்களின் பாடல் தேர்வு மற்றும் பாடும் முறைகளில் மிகுந்த அனுபவ முதிர்ச்சி வெளிப்படுகிறது. விஜய் டிவி இவர்கள் அனைவரையும் சிறப்பாக பயிற்சி செய்து மேடையில் பாடவைக்கிறது. ஒவ்வொரு வாரமும், இந்த நிகழ்ச்சியில் புதிய சிறப்பு விருந்தினர்கள் பங்கேற்று ரசிகர்களை ஆச்சரியப்படுத்துகின்றனர்.

அதேபோல, வாரந்தோறும் தீமை மையமிட்ட பாடல்களை போட்டியாளர்கள் பாடி வருகின்றனர். இந்த வாரம், யுவன் சங்கர் ராஜாவின் பிரபலமான பாடல்களை பாடி அனைவரையும் அசத்தியுள்ளனர். மேலும், இந்த வாரம் 90களின் வெள்ளிவிழா நாயகன் மோகன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றுள்ளார்.

நடிகர் மோகனை சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பிரியங்கா மற்றும் மாகாபா மிகுந்த ஆர்வத்துடன் வரவேற்று, அவரை பல சுவாரஸ்யமான விஷயங்களை பேச வைத்தனர். நிகழ்ச்சியில், மோகன் ஒவ்வொரு போட்டியாளரின் பாடலையும் மிகச் சிறப்பாக அனுபவித்ததை காண முடிந்தது.நடிகர் மோகனின் பல படங்கள் பாடல்களுக்காகவே வெள்ளிவிழா கண்டது குறிப்பிடத்தக்கது. இதய கோயில் உள்ளிட்ட பல படங்கள் சிறப்பாகப் பெயர் பெற்றுள்ளன. கிட்டார் நாயகனான மோகனை மீண்டும் கிட்டார் வாசிக்க வைத்து, சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மெருகேற்றியது.

- Advertisement -

Read more

Local News