Touring Talkies
100% Cinema

Wednesday, March 12, 2025

Touring Talkies

ஆடியோ உரிமமே இத்தனை கோடியா? ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ள “கேடி: தி டெவில்” திரைப்படம்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இந்திய சினிமாவில் மிகுந்த எதிர்பார்ப்புக்குப் மத்தியில் KVN Productions தயாரிப்பில் உருவாகும் திரைப்படம்”கேடி: தி டெவில்ஸ் வார்ஃபீல்ட்” இப்படம், டிசம்பர் 2024 இல் திரையரங்குகளில் வரவிருக்கிறது. இந்த ஆக்சன் படத்தின் மீது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு மிகுந்து இருக்கிறது.

1970களில் பெங்களூரில் நிகழ்ந்த உண்மைச் சம்பவங்களை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இப்படத்தின் ஆடியோ உரிமைகள் மட்டும், ₹17.70 கோடிக்கு விற்கப்பட்டிருப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரபலமான ஆனந்த் ஆடியோ நிறுவனம் இந்த உரிமைகளை பெற்றுள்ளது.

இப்படம் வெளியாவதற்கு ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் நிலையில், அதன் முதல் பாடல் ஆகஸ்ட் மாதத்தில் வெளியாகும் என்ற அறிவிப்பு, ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல கன்னட நடிகர் துருவா சர்ஜா இப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.ஷில்பா ஷெட்டி குந்த்ரா, ரமேஷ் அரவிந்த், சஞ்சய் தத், நோரா ஃபதேஹி மற்றும் V ரவிச்சந்திரன் ஆகிய முன்னணி நட்சத்திரங்களாக இப்படத்தில் நடித்துள்ளனர்.இப்படம் பான்-இந்தியா அளவில், ஒரு புதுமையான திரை அனுபவமாக உருவாகியுள்ளது.

“கேடி – தி டெவில்” 1970களின் பெங்களூர் நகரின் தெருக்களை மீண்டும் நம் கண்முன் கொண்டுவரும், வரலாற்று நிகழ்வுகள் அடிப்படையாக கொண்ட பரபரப்பான சம்பவத்தை மையமாகக் கொண்டுள்ளது.KVN Productions வழங்கும் “கேடி – தி டெவில்” படத்தை இயக்குனர் பிரேம் இயக்கியுள்ளார். இந்த பன்மொழி திரைப்படம் தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி மொழிகளில் வெளியாக உள்ளது.

- Advertisement -

Read more

Local News