Tuesday, September 17, 2024

ஆரம்பிக்கிறதா எஸ்டிஆர் 48 படப்படிப்பு? கமல் காட்டிய பச்சைக்கொடி…

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

சிம்பு நடிப்பில் எஸ்டிஆர் 48 படம் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, அதன் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்பது குறித்த கேள்விகள் எழுந்த நிலையில், தற்போது அதுபற்றி சினிமா வட்டாரத்தில் தகவல்கள் பரவுகின்றன. விரைவில் இந்த விவரங்களை ராஜ்கமல் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என தெரிகிறது. மேலும், நடிகர் சிம்பு கமல்ஹாசன் நடித்து வரும் தக் லைஃப் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

மாநாடு படத்துக்கு பிறகு கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்த வெந்து தணிந்தது காடு படம் பெரிதாக ஓடவில்லை. கடந்த ஆண்டு சிம்பு நடித்த பத்து தல படமும் தோல்வியடைந்தது. இதனால், எஸ்டிஆர் 48 படத்தின் மீது அதிக நம்பிக்கையுடன் இருக்கிறார் சிம்பு. முதல் முறையாக 100 கோடி பட்ஜெட்டில் சிம்புவை வைத்து பிரம்மாண்டமாக அந்த படத்தை கமல்ஹாசன் தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது.எஸ்டிஆர் 48 படத்தில் சிம்பு நடிப்பார் என எதிர்பார்த்திருந்த ரசிகர்களுக்கு திடீர் ஆச்சரியமாக கமல்ஹாசனின் தக் லைஃப் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

துல்கர் சல்மான் மற்றும் ஜெயம் ரவி தக் லைஃப் படத்திலிருந்து கால்ஷீட் காரணமாக விலகியதால், சிம்பு அந்த படத்தில் தற்போது நடித்து வருகிறார். அவரது பகுதி விரைவில் முடிந்தவுடன் அடுத்ததாக எஸ்டிஆர் 48 படத்தை ஆரம்பிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

துல்கர் சல்மான், ரித்து வர்மா மற்றும் கௌதம் மேனன் நடித்த கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தை இயக்கிய தேசிங் பெரியசாமி, வரும் ஜூன் 8ம் தேதி சிம்புவை வைத்து எஸ்டிஆர் 48 படத்தை தொடங்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விரைவில் இதுபற்றி ராஜ்கமல் நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

Read more

Local News