Tuesday, November 19, 2024

என்னது இசையமைப்பாளரே இல்லாமல் இசைஞானியின் பயோபிக்கா? இது என்ன புதுசா இருக்கு…

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கைக் கதையைத் பயோபிக் திரைப்படமாக உருவாக்கப் போகிறார்கள். உலகம் முழுவதும் மக்களை தனது இசையால் கட்டிப்போட்டு வைத்திருப்பவர் இளையராஜா. இவர் தன் வாழ்க்கையில் சந்தித்த சிரமங்கள், உழைப்பு, தடைகளை உடைத்தெறிந்த தருணங்கள் என இந்த பயோபிக்கில் காண ஆர்வமாக இருக்கிறார்கள் ரசிகர்கள்.இளையராஜாவின் கதாபாத்திரத்தில் தனுஷ் நடிப்பது குறிப்பிடத்தக்கது.

இளையராஜா தனது முதல் படமான அன்னக்கிளியிலேயே அனைவரையும் கவர்ந்தார்.இன்றும் இளையராஜாவின் இசை உலகம் முழுவதும் கேட்கப்படுகிறது. ஆனால் அவரது இசை பயணம் ஆரம்பித்தது கம்யூனிஸ்ட் மேடைகளில் தான்.அவரது மூத்த சகோதரர் பாவலர் வரதராஜன் நடத்திய பாவலர் க்ரூப்ஸ் என்ற இசைக் குழுவில் வாசிப்பாளராக இருந்தார் இளையராஜா.

இளையராஜாவின் இசையமைப்பில், விடுதலை படத்தின் இரண்டாவது பாகம் உள்ளிட்ட பல படங்கள் வரவிருக்கின்றன. இந்நிலையில், சில மாதங்களுக்கு முன்பு, இளையராஜாவின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு ஒரு திரைப்படம் எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.இந்த படத்தை மெர்குரி மூவிஸ் நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது. இதில் இளையராஜா கதாபாத்திரத்தில் தனுஷ் நடிக்கிறார்.இப்படம் படம் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், கமல் ஹாசனின் திரைக்கதையுடன் உருவாகவுள்ளது.

இந்நிலையில், இளையராஜா பயோபிக்குக்கு ஒரு புதிய தகவல் வெளியாகியுள்ளது. படக்குழுவின் திட்டப்படி, இந்த படத்தில் புதிய இசையமைப்பாளரை நியமிக்காமல், இளையராஜா இதுவரை இசையமைத்த பாடல்கள் மற்றும் பின்னணி இசையையே பயன்படுத்தவுள்ளனர் எனவும் இதனால், இசையமைப்பாளர் இல்லாமல் உருவாகும் முதல் திரைப்படமாக இது வரலாற்றில் இடம்பிடிக்கும் வாய்ப்புள்ளது என உறுதிப்படுத்தப்படாத தகவல் வெளியாகியுள்ளது.

- Advertisement -

Read more

Local News