Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

ஜூன் மாதத்தில் அடங்காத அசுரனாக வருகிறான் ராயன்! வெளியான ரிலீஸ் தேதி, ரசிகர்கள் கொண்டாட்டம்…

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் தனுஷ் திருச்சிற்றம்பலம், வாத்தி, கேப்டன் மில்லர் என்று தொடர்ந்து வெற்றி படங்களில் கொடுத்தார். தற்பொழுது அவரின் 50 வது படமான ‘ராயன்’ திரைப்படத்தை அவரே இயக்கி நடித்து இருக்கிறார்.

இப்படத்திற்கு, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. ராயன் படத்தில் எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், பிரகாஷ் ராஜ், சுதீப் கிஷன், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, வரலட்சுமி உள்ளிட்டோர் நடிப்பதாக படக்குழு போஸ்டருடன் அறிவித்து வெளியிட்டது.படத்தின் போஸ்டரை ஏப்ரல் 14 ஆம் தேதி வெளியிட்டனர்.

படத்தின் முதல் பாடல் தற்பொழுது வெளியாகியுள்ளது அப்பாடலிற்கு ‘அடங்காத அசுரன்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. திரைப்படம் வரும் ஜூன் மாதம் 13 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அப்டேட்டை படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இப்படம் கேங்ஸ்டர் கதைக்களத்துடன் இருக்கும் என சொல்லப்பட்ட நிலையில் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

Read more

Local News