Tuesday, November 19, 2024

15 நிமிடங்கள் நடிக்க 20 கோடி வாங்கிய கமலுக்கு வலைவிரித்த ராஜமெளலி…

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

உலகநாயகன் கமல் ஹாசன் நடித்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த விக்ரம் படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு இந்தியன் 2 மற்றும் தக் லைஃப் படம் வெளிவர உள்ளன. இதற்கிடையே பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள கல்கி 2898 AD படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் கமல்.

இந்த கேரக்டர்காக நடிக்க கமல் 15 நிமிடங்களுக்கு 20 கோடி சம்பளத்தை வாங்கி இருக்கிறாராம்.மேலும் இந்த கூட்டணியில் அமிதாப்பச்சன், தீபிகா படுகோன், திசா பதானி மற்றும் பலர் நடித்துள்ளார்கள். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்திருக்கிறார். இப்படம் கிட்டத்தட்ட 600 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ளது.இப்படத்தின் படக்குழுவினர் இறுதிகட்ட பணிகள் இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

கமலின் கதாபாத்திரம் அனைவரையும் கவரும் வகையில் மிரட்டி இருக்கிறார். சும்மாவே கமல், நடிப்பில் பிச்சு உதறுவார். அப்படிப்பட்டவருக்கு இப்படியொரு கதாபாத்திரம் கிடைத்தால் சொல்லவா செய்யணும். அதனால் தான் கமலின் அசுர நடிப்பை பார்த்து ராஜமவுலி வியந்து போட்டுள்ளாராம்.

இதனைத் தொடர்ந்து இவர்கள் கூட்டணியில் புது படம் ஆரம்பமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தை மிக பிரம்மாண்டமான முறையில் இயக்க வேண்டும் என்று ராஜமவுலி கிட்டத்தட்ட ஆயிரம் கோடி பட்ஜெட்டுக்கு ப்ளான் போட்டு வைத்துள்ளாரா‌ம்‌ ராஜ மௌலி. இதற்கான பேச்சு வார்த்தைகள் அனைத்தும் முடிந்த நிலையில் கமல், தக் லைப் படத்தை முடித்துவிட்டு ராஜமௌலியுடன் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

Read more

Local News