Tuesday, November 19, 2024

ஜோதிகாவின் க்யூட்டான கிளிக்ஸ்! ஃபிட்னஸாக இருக்கும் ஜோதிகாவின் ரகசியம் இதோ…

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகை ஜோதிகா சூர்யாவை திருமணம் செய்து கொண்ட பின்னர் நீண்ட காலங்கள் படங்களில் நடிக்காமல் இருந்த நிலையில் குழந்தைகள் மற்றும் குடும்பத்தை கவனித்து வந்தார்.பின்னர் மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்த நிலையில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை மட்டும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் உடல் பருமன் அதிகமாக இருந்த நிலையில் 45 வயதில் கடுமையான உடற்பயிற்சி மூலம் தனது இளமையை மீண்டும் கொண்டு வந்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்திருக்கிறார் ஜோதிகா.சில வாரங்களுக்கு முன்பு ஜோதிகா மற்றும் சூர்யா ஒன்றாக உடற்பயிற்சி மேற்கொள்ளும் வீடியோ வெளியாகி வைரல் ஆகி இருந்தது.அவர் தனது ஃபிட்னஸ் மற்றும் இளமையாக இருக்க என்னென்ன விஷயங்களை பின்பற்றி இருக்கிறார் என்பதை சமீபத்தில் கூறியிருக்கிறார்.

காலை எழுந்த உடன் குறைந்தபட்சமா 30 நிமிடங்கள் வரை ஜோதிகா ரன்னிங் செய்வாராம். அதேபோல் அவர் அருந்தும் பானங்களும் ஜோதிகாவின் உடல் எடையை குறைத்ததாக கூறப்படுகிறது.அதோபோல் குறிப்பாக கிரீன் டீ மற்றும் இளநீர் போன்றவற்றை தான் அருந்துவாராம். மேலும் தனது உடல் எடையை உடற்பயிற்சி வாயிலாக குறைத்துள்ளதாக கூறியிருக்கிறார்.சில பழக்கவழக்கங்களை அன்றாட வாழ்க்கையில் மாற்றினாலே உடம்பை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம் எனவும் சொல்லியிருக்கிறார்.

மேலும் ஜோதிகாவின் இப்போது உள்ள க்யூட்டான புகைப்படங்கள் இணையதில் வைரலாகி கொண்டிருக்கிறது. இதை பார்த்த ரசிகர்கள் ஜோதிகாவா இது என ஆச்சரியத்தின் உச்சத்திற்கு சென்றுள்ளனர்.

- Advertisement -

Read more

Local News