Friday, November 22, 2024

“இளையராஜாவை வி்ட்டுப் பிரிந்தது ஏன்..?” – கவிஞர் பிறைசூடனின் விளக்கம்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ஒரு காலத்தில் இளையராஜாவுடன் அவருடைய ரிக்கார்டிங் தியேட்டரிலேயே வசித்து வருகிறார் என்று சொல்லும் அளவுக்கு இளையராஜாவுடன் நெருக்கமாக இருந்த கவிஞர் பிறைசூடன், ஒரு கட்டத்தில் இளையராஜாவுடன் பிணக்கு ஏற்பட்டு அவரிடமிருந்து விலகினார்.

அதற்கான காரணம் என்ன என்பது பற்றி சமீபத்தில் ஒரு பேட்டியில் கவிஞர் பிறைசூடனே சொல்லியிருக்கிறார்.

“நான் அவருடன் இருந்த காலக்கட்டத்தில் இளையராஜா தன்னைச் சுற்றியிருந்த கவிஞர்களுக்கு ஒவ்வொரு படம் கொடுப்பதாகச் சொன்னார்.

அதன்படி காமகோடியனுக்கு ஒரு படம் கொடுத்தார். மு.மேத்தாவுக்கு ‘வேலைக்காரன்’ படத்தை கொடுத்தார். எனக்குப் ‘பெரிய வீட்டுப் பண்ணைக்காரன்’ படத்தைக் கொடுத்தார்.

அந்தப் படத்துக்கு பாடலுக்குரிய சிச்சுவேஷனைக் கேட்டுட்டு வந்துட்டேன். அந்த நேரத்தில் அந்தப் படத்தின் தயாரிப்பாளரான சங்கிலி முருகன் என் வீட்டுக்கு வந்தார்.

“பொதுவா என்னுடைய படங்கள்ல கங்கை அமரன்தான் பாட்டெழுதுவார். அதனால் இதுலேயும் அவரே எழுதட்டும். அதனால், நீங்க இந்தப் படத்துக்குப் பாடல் எழுத வேண்டாம்…” என்றார் சங்கிலி முருகன்.

“எழுதிட்டனே..?” என்றேன். “இல்லை.. உங்களுக்குரிய சம்பளத்தை நான் கொடுத்திடறேன். நீங்க எழுத வேண்டாம்…” என்றார் சங்கிலி முருகன். “சரி.. ஓகே”ன்னு டியூன் இருந்த கேஸட்டை அவர்கிட்டயே கொடுத்திட்டேன்.

அப்புறம் இளையராஜாகிட்ட அதைச் சொன்னேன். “இப்ப உங்களுக்குக் கஷ்டம்ன்னா ஏதாவது பணம் வாங்கிக்குங்க…” என்றார். நான் அப்படி வாங்க விரும்பவில்லை.

அதோட ஆர்.சுந்தர்ராஜனின் ‘ராஜாதிராஜா’ படத்தில் ‘மீனம்மா’ பாட்டு செம ஹிட். அதே மாதிரி பி.வாசுவின் ‘உழைப்பாளி’ படத்தில் ‘சைலன்ஸ்’ பாடலும் ஹிட்டாயிருச்சு. ஒரு டைரக்டர்கிட்ட வேலை செஞ்சு ஒரு பாட்டு ஹிட்டாயிருச்சுன்னா அடுத்தப் பாட்டு கொடுக்கணுமா.. வேண்டாமா..?

அதோட ஒரு இயக்குநர் செலக்ட் செஞ்ச பல்லவியை இவர் ‘வேண்டாம்’ன்னு சொல்லிருவாரு. அது ஒரு கவிஞனா என்னை ரொம்பப் பாதிச்சது. ‘ஒண்ணு பிச்சை போடுங்க. இல்லாட்டி போயிடறேன்’னு சொன்னேன். ‘நான் தமிழ்நாட்டுல தலை நிமிர்ந்து நடக்கணும்ன்னு நினைக்கிறேன். இங்க தலை குனிஞ்சு நடந்து, வெளில போய் தலை நிமிர்ந்து நடக்கணும்ன்னா அது என்னால முடியாது.. அதுனால விலகிக்கிறேன்’னு சொல்லிட்டு நானே வந்துட்டேன்..” என்கிறார் கவிஞர் பிறைசூடன்.

- Advertisement -

Read more

Local News