இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள திரைப்படம் ஜன நாயகன். அனிருத் இசையமைக்கும் இப்படத்தில், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பாபி தியோல் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் நடக்கின்றன. பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9ம் தேதி படம் வெளியாக உள்ளது.

சமீபத்தில் இப்படத்தில் இருந்து வெளியான தளபதி கச்சேரி என்ற பாடல் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் நடப்பதாக ஏற்கனவே தகவல் வெளியானது.
இந்நிலையில் ஜன நாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற டிசம்பர் 27ல் மலேசியாவின் கோலாலம்பூரில் உள்ள புக்கிட் ஜலில் ஸ்டேடியத்தில் பிரமாண்டமாக நடக்கவுள்ளதாக படக்குழு வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளது.

